செய்திகள்

உடுமலையில் இன்று மதியம் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

உடுமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

உடுமலை:

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரை சேர்ந்தவர் சி.டி.முருகன்(வயது 55). எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி(48), மகள் பானுபிரியா(23).

பானுபிரியா பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 3 பேரும் உடுமலை ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பின் பகுதியில் பிணமாக கிடந்தனர். அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை டி.எஸ்.பி. விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மறையூர் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் அஜய்குமார் வந்தார். அவர்கள் தற்கொலை செய்த 3 பேரின் பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.