செய்திகள்

கர்நாடகா சட்டசபை தேர்தல் - பாஜக வெளியிட்ட 3 பிரச்சார விளம்பரங்களுக்கு தடை

கர்நாடகா சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் வெளியிடப்பட்ட 3 பிரச்சார விளம்பரங்கள் தேர்தல் விதிகளை மீறி எடுக்கப்பட்டுள்ளதால் அதனை ஒளிப்பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. #karnatakaelection2018 #bjpadvertisement

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு கட்சி சார்பில் விளம்பரங்கள் ஒளிப்பரப்படும்.

இந்நிலையில், பாஜக சார்பில் ஒளிப்பரப்பட்ட 3 விளம்பரங்கள் தேர்தல் விதியை மீறி எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற மேல்சபை உறுப்பினர் வி எஸ் உக்ரப்பா புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 3 விளம்பரங்களை ஒளிப்பரப்ப மீடியா சர்டிபிகேஷன் மற்றும் மானிட்டரிங் குழு தடை விதித்துள்ளது.

ஜன விரோதி சர்கார், விப்காலா சர்கார் மற்றும் மூரு பாக்கியா என்ற இந்த 3 விளம்பரங்களுக்காக அனுமதி கடந்த 22-ம் தேதி பாஜக மாநில செயலாளர் கணேஷ் யாஜிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து விளம்பரத்தில் கூறப்படும் கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறி சொல்லப்பட்டுள்ளதால் அதனை ஒளிப்பரப்ப மற்றும் பகிர தடை செய்யப்பட்டுள்ளது. #karnatakaelection2018 #bjpadvertisement