குமாரசாமி 
செய்திகள்

ராமர் கோவில் கட்ட நன்கொடை கேட்டு மிரட்டல்: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

ராமர் கோவில் கட்ட நன்கொடை பெற வந்தவர்களால் அச்சுறுத்தப்பட்டேன் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

மாலை மலர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நன்கொடை பெறப்பட்டு வருகிறது. சில இடங்களில் மக்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, தன்னை நன்கொடை கேட்டு மிரட்டினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் ‘‘மூன்று நபர்கள் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் பணம் தருமாறு மிரட்டினார்கள். ஏன் நன்கொடை தர மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

ராமர் பெயரில் அதிகாரப்பூர்வமாற்ற நபர்கள் நன்கொடை வசூலிக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அதை கணக்கு வைக்க எடுத்துச் செல்வது யார்? யார் நன்கொடை கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் என்பதை வீட்டில் குறித்து வைக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள்?’’ என்றார்.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் ராமர் கோவில் கட்டுவதற்காக பணம் வசூலிக்கப்படுவது குறித்து வழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.