தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள திருஈங் கொய்மலை சாலியர் தெருவை சேர்ந்தவர் அருணகிரி நெசவு தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி(42) இவர் கடந்த 4-ந்தேதி காலை மணமேடு காவிரியாற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மணமேடு காவிரியாற்றில் நடுவே அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடப்பதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் காணமல் போன சரஸ்வதி என தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு அவர் எவ்வாறு இறந்தார்,அல்லது அவரை யாரும் கொலை செய்து தண்ணீரில் தள்ளி விட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.