வீடு புகுந்து கொள்ளை 
செய்திகள்

தொப்பூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

தொப்பூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 45). லாரி டிரைவரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். மீண்டும் வீட்டிற்கு சென்றபோது கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக சேகர் தொப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT