விபத்து காயம் 
செய்திகள்

தொப்பூரில் 2 லாரிகள் கவிழ்ந்தது- 4 பேர் படுகாயம்

தொப்பூர் அருகே விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நல்லம்பள்ளி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து மஞ்சள் மூட்டைகள் ஏற்றிய ஒரு லாரி சேலத்திற்கு புறப்பட்டது. இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் மதுரப்பட்டியை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 32), எருமப்பட்டியை சேர்ந்த மாற்று டிரைவர் விஜயகுமார் (27) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இதேபோல் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட லாரி நேற்று தொப்பூர் சோதனைச்சாவடி அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் நரேந்திரா, கிளனர் நரசிம்மலு(35) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இந்த 2 விபத்துகளில் படுகாயமடைந்த 4 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்துகள் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.