தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி 
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்தை பெருக்க மானியம்- கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்தை பெருக்க மானியம் அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி  சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தை பெருக்க 2020-2021-ம் ஆண்டு முதல் 2024-2025-ம் ஆண்டு வரை 5 நிதி ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் மானிய உதவியும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானிய உதவியும் வழங்கப்படுகிறது.

இந்த மானிய உதவி புதிய மீன் மற்றும் இறால் பண்ணைக்குட்டை அமைத்தல், உயிர்கூழ் முறையில் மீன்வளர்ப்பு செய்தல், வண்ணமீன் வளர்ப்பு திட்டம், மீன்விற்பனை செய்பவர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி வழங்குதல், கடற்பாசி வளர்த்தல், கூண்டுகளில் மீன்வளர்த்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான படகுகள், ஒருங்கிணைந்த கடல் வண்ண மீன்வளர்த்தல், மற்றும் கடல் வண்ணமீன் சேகரித்தல் ஆகியவைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2320458 மற்றும் 9384824352 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.