கோர்ட் தீர்ப்பு 
செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் - பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரள மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தொடுபுழா சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் தண்ணிதோடு கோடவாடி பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பத்தினம்திட்டா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஷிபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் இவர் மீது தொடுபுழாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஷிபுவுக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், இந்த அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதைதொடர்ந்து பாதிரியார் சிபு தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT