திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேலபண்டார புரத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 27). ஓமியோபதி டாக்டரான இவர் திசையன்விளை மற்றும் சாத்தான் குளத்தில் கிளீனிக் நடத்தி வந்தார்.
திருப்பதி வழக்கமாக தினமும் திசையன்விளையில் உள்ள கிளீனிக்கில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவார். ஆனால் நேற்று வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் இட்டமொழி- விஜயஅச்சம்பாடு விலக்கு பகுதியில் உள்ள கிணற்றுக்குள் திருப்பதி பிணமாக கிடந்தார். அவரது உடலில் அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தன. அவரை யாரோ மர்ம நபர்கள் உருட்டுக்கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலைசெய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.