செய்திகள்

திருவிடைமருதூரில் இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஜோதிடர் பலி

திருவிடைமருதூரில் இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஜோதிடர் பலி

மாலை மலர்

திருவிடைமருதூர்:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). ஜோதிடர். இந்த நிலையில் இன்று காலை திருவிடைமருதூர் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் செல்வம் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து செல்வம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வழியாக சென்ற ராமேஸ்வரம் ரெயிலில் செல்வம் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. பின்னர் செல்வம் உடலை பிரேத பரிசோதைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.