பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 18 கோடியில் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு 132 சாலை பணிகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை பல்லவன் நகரில் நடைபெற்றது.
இதையடுத்து தீவிர துப்புரவு முகாம் பணியும் நடைபெற்றது. இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பூமி பூஜை மற்றும் தீவிர துப்புரவு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகர் பகுதியை தூய்மை செய்தனர்.
நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் ஆனந்த ஜோதி, மேலாளர் பழநி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகரமைப்பு அதிகாரிகள் ராஜேந்திரன், கவிதா, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், மேற்பார்வையாளர் லஷ்மணன் மற்றும் சத்தியநாராயணன், டி.மகேந்திரன், டி.எஸ்.ராஜா, டி.இ.திருமலைராஜா, ஐ.டி.அரசன், மாரியப்பன், அருள்குமார்,சங்கர், பாரத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.