ரேஷன் அரிசி பறிமுதல் 
செய்திகள்

திருவேங்கடம் அருகே 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திருவேங்கடம் அருகே 14 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே மலையாங்குளம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவேங்கடம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் ரவிகணேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 14 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, சங்கரன்கோவில் அரசு கிட்டங்கிக்கு கொண்டு சென்றனர். இதை பதுக்கி வைத்தது யார்? எந்த கடையிலிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.