திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள பிலாங்காலை மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவரது மகள் அகல்யா (வயது 20).
முளகுமூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அகல்யா பி.எட். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கமாக கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
கடந்த 2-ந்தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அகல்யா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மகளை கல்லூரி மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடினார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைதொடர்ந்து திருவட்டார் போலீசில் சாந்தகுமாரி புகார் செய்தார். அந்த புகாரில் முளகுமூடு பகுதியை சேர்ந்த வாலிபரும், அவரது தாயாரும் சேர்ந்து காரில் தனது மகள் அகல்யாவை கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார்.
இதுபற்றி திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மாயமான மாணவி அகல்யா வையும், அவரை கடத்திச் சென்றவர்களையும் தேடி வருகிறார்.