செய்திகள்

திருவாரூரில் இடியுடன் பலத்த மழை

திருவாரூரில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகலில் வெளியே செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூரில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதே போல் நன்னிலம், குடவாசல், சன்னா நல்லூர், மாங்குடி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை மானாவாரி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதே போல் நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.