திருவாரூர்:
திருவாரூர் பஸ் நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான நெல் அறவை மில் உள்ளது. இங்கு ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். நேற்று இரவு மில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் அடியில் குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் படுத்து தூங்கி விட்டாராம்.
இந்நிலையில் இன்று காலை அந்த லாரி டிரைவர் அடியில் ஒருவர் படுத்து இருப்பது தெரியாமல் லாரியை எடுத்த போது அவர் தலையில் டயர் ஏறி சம்பவ இடத்திலேயே பலியனார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews