செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாலை மலர்

திருவாரூர்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை திருவாரூர், நாகை மாவட்டங்களில் பருவமழை பொய்த்து விட்டதால் நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் அணை பாசனத்துக்கு திறக்கபடலாம் என்ற நம்பிக்கையில விவசாயிகள் உள்ளனர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாடக்ளாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மானாவரி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாருர் மாவட்டத்தில் நேற்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை பலத்த மழை பெய்தது. திருவாரூர், குடவாசல், நன்னிலம், வலங்கைமான் ஆகிய இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம பெருக்கெடுத்து ஓடியது.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவாரூர்-12.4

நன்னிலம்-8.4

குடவாசல்-41.8

வலங்கமை£ன்-41.2

இதே போல் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி பயிர்கள், தோட்ட பயிர்கள் மகதுல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.