குபேரர் லிங்கம் 
செய்திகள்

திருவண்ணாமலையில் 24-ந்தேதி குபேரர் கிரிவலம்

திருவண்ணாமலையில் 24-ந்தேதி குபேரர் கிரிவலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு குபேரர் கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.

பின்னர் மாலை 5 மணியளவில் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். குபேரர் பூஜை செய்வதை காண்பதற்காக ஆண்டுதோறும் திரளான பக்தர்கள் குவிகின்றனர்.

குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு வருகின்ற 24-ந் தேதி கார்த்திகை மாத சிவராத்திரியையொட்டி குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அன்று குபேர கிரிவலத்தையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள வீடுகளில் முன்பாக பெண்கள் அரிசி மாவால் கோலம் போட்டு, வெற்றிலை வைத்து நெய்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த பிற மாவட்ட மக்களும் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலை குவிவார்கள்.

இதனால் திருவண்ணா மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதம் இந்த ஆண்டு குபேரர் கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.