செய்திகள்

டி.என்.பி.எல்: திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது திருவள்ளூர் வீரன்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வீழ்த்தியது.

மாலை மலர்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் மோதிய போட்டி நெல்லையில் நடைபெற்றது. டாஸ் வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அந்த அணியினர் திருச்சி வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு திருவள்ளூர் வீரன்ஸ் அணியினர் 182 ரன்களை குவித்தனர். அந்த அணியில் சதுர்வேத் 89 ரன்கள் மற்றும் சித்தார்த் 60 ரன்களையும் எடுத்தனர். திருச்சி அணி சார்பில் கவுசிக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியினர், திருவள்ளூர் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க வீரர்கள் சற்று சமாளித்து ஆடினாலும் இடைநிலை மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.