கைது 
செய்திகள்

திருவாடானை அருகே மணல் அள்ளிச்சென்றவர் கைது

திருவாடானை அருகே மணல் அள்ளிச்சென்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டி:

திருவாடானை தாலுகா கங்கானரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 49). இவர் டிராக்டரில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று டிராக்டரை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.