திருத்தணிக்காசலம் 
செய்திகள்

திருத்தணிக்காசலம் கண்டுபிடித்த மருந்தின் ஆய்வு நிலை என்ன?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சித்த மருத்துவர் என்று கருதப்படும் திருத்தணிக்காசலம் கண்டுபிடித்த மருந்தின் ஆய்வு நிலை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாலை மலர்

சித்த மருத்துவர் என்று கருதப்படும் திருத்தணிகாசலம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில், திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தன்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருத்தணிக்காசலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘குண்டர் சட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது. கொள்கை அடிப்படையில் முதல்வர் முடிவு எடுக்கும் நிலையில், அவர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவது சரியா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவதை வரவேற்கிறோம். மருத்துவ உதவியாளர்களாக இருப்பவர்களை எல்லாம் மருத்துவர்களாக கருத முடியாது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன் என்று சித்த மருத்துவராக கருதப்படும் திருத்தணிக்காசலம் கூறிவரும் நிலையில், அவருடைய மருந்து குறித்த ஆய்வு என்ன? என்று அரசு நோக்கி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஒரு வாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.