பள்ளிப்பட்டு:
வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவரது உறவினர் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு உண்டானது.
அவருக்கு கையில் கட்டு போட்டு சிகிச்சை அளிப்பதற்காக திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள ராஜாநகரம் மோட்டூரில் உள்ள மருத்துவரை அழைத்து வர விஜயன் காரில் சென்றார்.
ராஜா நகரம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் காரை மறித்தனர். பின்னர் டிரைவர் விஜயனை கத்தி முனையில் மிரட்டி கீழே இறக்கினர். பின்னர் 3 பேரும் காரை மட்டும் கடத்திச் சென்று விட்டனர்.
இது பற்றி விஜயன் உடனடியாக ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை கடத்திய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.