விபத்து பலி 
செய்திகள்

திருப்பனந்தாள் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

திருப்பனந்தாள் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ரத்தினசாமி (வயது 70).

இவர் கும்பகோணம்- அணைக்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் நிலைதடுமாறி மோதியது இதில் பலத்த காயமடைந்த ரத்தினசாமி அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.