கைது 
செய்திகள்

திருநின்றவூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

திருநின்றவூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆவடி:

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் (19). கடந்த 2-ந்தேதி இவர் திருநின்றவூர் வத்சலாபுரம் 3-வது தெருவில் பாழடைந்த கட்டிடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் ஆவடியை சேர்ந்த சுரேஷ், சூலூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் முன் விரோதத்தில் சதீசை கொலை செய்தது தெரிய வந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் திருநின்றவூரை சேர்ந்த மதன் என்பவரை தேடி வருகின்றனர்.