தொழிலாளி மரணம் 
செய்திகள்

திருநின்றவூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருநின்றவூர் அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆவடி:

திருநின்றவூரை அடுத்த நடுக்குத்தகை கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள். நேற்று காலை தியாகராஜன், தனது குழந்தைகள் நுங்கு கேட்டதால் வீட்டுக்கு எதிரே உள்ள பனை மரத்தில் ஏறினார். மரத்தின் உச்சியில் ஏறி அங்கிருந்த காய்ந்துபோன மட்டையை அவர் கையில் பிடித்தவுடன் அது பிய்த்துக் கொண்டு அங்கிருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.