கைது 
செய்திகள்

திருநின்றவூர் அருகே காரில் போதை பொருள் கடத்திய வாலிபர் கைது

திருநின்றவூர் அருகே காரில் போதை பொருள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி:

ஆவடியை அடுத்த திருநின்றவூர், பாக்கம் சோதனைச் சாவடியில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 2 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த பெரியபாளையம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஜானகிராமன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.

இது குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT