தற்கொலை 
செய்திகள்

திருநள்ளாறு அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

திருநள்ளாறு அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரைக்கால்:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அகலங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது52). டிரைவரான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லட்சுமணனின் மகன் விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.