செய்திகள்

குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - திருமாவளவன்

குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென திருமாவளவன் கூறி உள்ளார். #Gutkha #Thirumavalavan

மாலை மலர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குட்கா விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குட்கா பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கோவையில் கண்டுபிடித்த குட்கா ஆலை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்தது. நீதிபதி, மன சாட்சிபடியே நடந்து கொண்டதாக விளக்க மளித்தார். நீதிபதி மன சாட்சிபடி தீர்ப்பு வழங்க கூடாது. சட்டப்படி வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், மதகலவரம் ஏற்படும். 3-வது அணி உருவானால் நாங்கள் வரவேற்போம். ஆனால் மதவாத சக்திக்கு எதிரான ஓட்டுகள் சிதறி போய்விடக்கூடாது. ஆந்திராவுக்கு செல்லும் தமிழக தொழிலாளர்களை செம்மர கடத்தல் வழக்கில் அம்மாநில போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Gutkha #Thirumavalavan