செய்திகள்

திருமங்கலம் அருகே தாயின் இறுதி சடங்கில் மகனுக்கு கத்திக்குத்து

திருமங்கலம் அருகே தாயில் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் நாகம்மாள். இவருக்கு 6 மகன், மகள்கள் உள்ளனர். நேற்று நாகம்மாள் இறந்துவிட்டார். இதையடுத்து இறுதி சடங்கில் மகன்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மூத்த மகன் மாரியப்பனுக்கும், அவரது சகோதரர் முத்து(வயது 55) என்பவருக்கும் இறுதிச் சடங்கு செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனின் மகன் மாரிச்செல்வம் என்ற கார்த்திக் (30) என்பவர் திடீரென்று சித்தப்பா முத்துவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.