செய்திகள்

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மாணவன் பலி

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

மாலை மலர்

போரூர்:

சென்னை வில்லிவாக்கம் பாபா நகரைச் சேர்ந்தவர் மனோராதேன் (வயது 38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ரஜித் (வயது 9) திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 17-ந்தேதி காலை தனது தந்தை மனோராதேனுடன் பைக்கில் சிறுவன் ரஜித் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான் திருமங்கலம் 21-வது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேக தடையில் ஏறி இறங்கியது.

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுவன் ரஜித் கீழே விழுந்தான். இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரஜித் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். #accident