பஸ் நிலையத்தில் கிடந்த பெண் குழந்தை. 
செய்திகள்

கொட்டும் மழையில் 4 மாத பெண் குழந்தை வீச்சு: கல்மனம் படைத்த தாய் யார்?

திருமங்கலம் பஸ் நிலையத்தில் பிறந்த 4 மாத பெண் குழந்தையை பஸ் நிலையத்தில் விட்டுச் சென்ற கொடூர மனம் படைத்த தாய் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலத்தில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11 மணி அளவில் நகர் பஸ் நிலையத்தில் மறைவான இடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 4 மாதமே ஆன பெண் குழந்தை கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவில் இரக்கமின்றி பெற்ற பச்சிளம் குழந்தையை விட்டுசென்ற கொடூர மனம் படைத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.