செய்திகள்

திருக்கோவிலூர் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபருக்கு வலைவீச்சு

டி.வி. பார்க்க சென்ற மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் கடயம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் அந்த பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) வீட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.வி. பார்க்க செல்வார். அவ்வாறு வீட்டுக்கு சென்று வந்த நிலையில் சுரேஷ், அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனைக்கண்ட அவரது பெற்றோர் உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுபோய் டாக்டரிடம் காண்பித்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சிறுமியை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சிறுமியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.