மரணம் 
செய்திகள்

திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் குப்பத்துமேடு மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் ஜெவின் (வயது 8). இவன் நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன், அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜெவின் நீரில் மூழ்கி இறந்தான். இதுகுறித்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.