கைது 
செய்திகள்

திருச்சி அருகே மணல் திருடிய 2 பேர் கைது

திருச்சி அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அதிகமாக மணல் திருட்டு நடைபெறுவதாக வி.ஏ.ஓ. பாரதிதாசனுக்கு அதிகமாக ரகசிய தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து வி.ஏ.ஓ. தலைமையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உத்தரவின்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மினி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதை மடக்கி பிடித்த ஸ்ரீரங்கம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரி ஓட்டி வந்த டிரைவர் திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த அசோக் மேதா (வயது 29) மற்றும் நவநீதன்( 30) ஆகிய2 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT