கைது 
செய்திகள்

திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

திருச்சி அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 22). இவர் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென இவரின் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஜாகிர் உசேன் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்போன் திருடிய வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிக் ( 21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை  கைது செய்தனர்.

SCROLL FOR NEXT