விபத்து 
செய்திகள்

திருச்சி அருகே லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி

திருச்சி அருகே லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மதுரை -திருச்சி பைபாஸ் சாலையில் பயணியை இறக்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி இப்ராகிம் ஆட்டோவின் மீது மோதியது, இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் இப்ராகிமை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இப்ராகிம் இறந்தார்.

இதுகுறித்து தெற்கு புலனாய்வு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT