திருபுவனை:
திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மாரியம்மாள். (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணன் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
நேற்று வீட்டின் கட்டுமான பணியில் மாரியம்மாள் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது விஷப்பாம்பு ஒன்று மாரியம்மாளின் காலில் கடித்து விட்டது.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருபுவனை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாரியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாரியம்மாளின் மகன் பரசுராமன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews