செய்திகள்

காவலாளி மோடி தயவால் கொள்ளையடித்த முதலாளிகள் - ராகுல் குற்றச்சாட்டு

அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவலாளி மோடி தயவால் கொள்ளையடித்த முதலாளிகள் என குற்றம்சாட்டியுள்ளார். #LSpolls2019 #Congress #RahulGandhi #PMModi #Chowkidar

மாலை மலர்

திஸ்பூர்:

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பொதுக்கூட்டம் இன் று நடைபெற்றது. லக்கிம்பூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கிகள் வாசலில் மெகுல் சோஸ்கி, நிரவ் மோடி, அனில் அம்பானி உள்ளிட்டோர் நிற்கவில்லை.

நீங்கள் உங்கள் பணத்துக்காக வரிசையில் நின்றபோது, காவலாளி மோடியின் உதவியால் அவர்கள் பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

சாதாரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் வீடுகளின் வாசலில் காவலாளி நிற்பதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அனில் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் வீடுகளில் காவலாளிகள் நிற்பதை பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார். #LSpolls2019 #Congress #RahulGandhi #PMModi #Chowkidar