மரணம் 
செய்திகள்

அனல்மின் நிலைய என்ஜினீயர் திடீர் மரணம்

அனல்மின் நிலைய என்ஜினீயர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பொன்னேரி:

கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காரணம் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.