செய்திகள்

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது.

பாகூர்:

பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆற்றில் பிணமாக மிதந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு ஊர் திரும்பும்போது குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்காலம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

SCROLL FOR NEXT