விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 
செய்திகள்

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது

தென்காசி மாவட்டத்தில் முதல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

மாலை மலர்

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் முதல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (27-ந் தேதி) கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் சுப்பாராஜா மண்டபத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள்.

எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.