செய்திகள்

தேனி அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தல்

தேனி அருகே ஆட்டோவில் மது கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கூடலூர்:

தேனி அருகே கூடலூரில் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையிலான லோயர் கேம்ப் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.

போலீசாரைக் கண்டதும் ஆட்டோவில் இருந்த நபர் தப்பி ஓடி விட்டார். மேலும் ஆட்டோவில் சுமார் 210 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் ஜெயராமை கைது செய்தனர்.

தப்பி ஓடிய நபர் குறித்து விசாரித்ததில் அவர் குமரேசன் என்றும் பாரில் விற்பனை செய்வதற்காக மது கடத்தி வந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசனை தேடி வருகின்றனர்.

இதே போல் சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் மார்க்கையன்கோட்டை - அம்மாபட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் முன்பு மாரியம்மாள் என்பவர் மது விற்றுக் கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் வீட்டில் பதுக்கி மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மாரியம்மாள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.