செய்திகள்

குரங்கணி தீ விபத்து - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி 90 சதவீத தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. #TheniForestFire #Kurangani #KuranganiForestFire

தேனி மாவட்டம், குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி தீக்காயம் அடைந்தவர்கள் மதுரையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கவுந்தபாடியைச் சேர்ந்த விவேக்-திவ்யா தம்பதியினர் குரங்கணிக்கு மலையேற்றத்திற்கு சென்றபோது காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினர். இதில் விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

90 சதவீத தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட திவ்யா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்று பிற்பகல் திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

விவேக்குக்கும், திவ்யாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.  #TheniForestFire #Kurangani #KuranganiForestFire  #tamilnews

SCROLL FOR NEXT