செய்திகள்

குரங்கணி தீவிபத்து - கோவை வாலிபர் பலி

குரங்கணி தீ விபத்தில் கோவை சிக்கி கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தை வாலிபர் விவின் உயிரிழந்தார். அவருடைய மனைவி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாலை மலர்

கிணத்துக்கடவு:

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் விவின் (வயது 34). என்ஜினீயரிங் பட்டதாரி. மலையேறும் பயிற்சியை அதிகம் விரும்பி அடிக்கடி மலையேற செல்வது வழக்கம். அப்படி மலையேறும் பயிற்சியின்போது இவருக்கும் கோவை கிணத்துகடவை சேர்aந்த திவ்யா (30) என்ற என்ஜினீயரிங் பட்டதாரிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். திருமணம் முடிந்ததும் கிணத்துக்கடவில் உள்ள மாமனார் விஸ்வநாதன் நடத்திய மரஅறுவை மில்லில் வேலை பார்த்து வந்தார்.

மாமனார் இறந்த பின்னர் விவின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காதல் தம்பதி இருவரும் குரங்கணி பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி விவின் பரிதாபமாக இறந்தார்.

மனைவி திவ்யா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கிணத்துகடவில் இருந்து அவரது உறவினர்கள் தேனி விரைந்தனர்.  #tamilnews