செய்திகள்

காதல் ஜோடியை கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை - தேனி கோர்ட் தீர்ப்பு

கடந்த 2011-ம் ஆண்டு காதல் ஜோடியை கொடூரமாக கொன்ற வழக்கில் திவாகர் என்பவருக்கு மரண தண்டனை விதித்து தேனி மாவட்ட செசன்ஸ் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

மாலை மலர்

தேனி:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு எழில் மற்றும் கஸ்தூரி ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. காதல் ஜோடிகளான இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், எழிலின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணையில் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளை என்பவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், எழிலை அரிவாளால் வெட்டி கொலை செய்து, கஸ்தூரியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் சிறையிலடைக்கப்பட்டார்.

கொல்லப்பட்ட காதல் ஜோடி

எட்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தேனி மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி செந்தில் குமரேசன் இன்று தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட திவாகர் என்ற கட்டவெள்ளை குற்றவாளி என அறிவித்ததோடு, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனையும் விதித்து நீதிபதி

தீர்ப்பளித்தார். #TamilNews