செய்திகள்

கோவில் கோபுர கலசம் திருட்டு: காரில் வந்த மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே பழமை வாய்ந்த ஆலீஸ்வரர் மற்றும் பொறையாத்தம்மன் கோயில் கலசத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூரில் பொன்னங்குப்பம் கிராம சாலையில் பழமை வாய்ந்த ஆலீஸ்வரர் மற்றும் பொறையாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கோவில் கலசத்தை திருடி சென்றுவிட்டனர். இந்நிலையில் அந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கோயில் கோபுரத்தின் மேல் பகுதியில் விமான கலசம் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயிலை பார்வையிட்டு விசாரணை செய்தனர். அப்போது நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அந்த பகுதியை காரில் சுற்றி வந்ததாக தெரிவித்தனர். எனவே அவர்கள் கோவில் கலசத்தை திருடி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT