சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் ஏராளமானோர் உயிர் இழந்து வருகிறார்கள்.
இதையடுத்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்பும் அதிகாரிகள் அபராதமும் விதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனையில் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது குடிநீர் தொட்டி, உடைந்த மருத்துவ பொருட்கள் மற்றும் பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் தண்ணீர் தொட்டியில் விஷத்தன்மையுடய பாம்பு இருந்ததும், மருத்துவ கழிவுகள் அங்கேயே கொட்டப்பட்டிருந்ததையும் பார்த்த அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.
இதே போல ராமகிருஷ்ணா சாலையில் உள்ள சரஸ்வதி ஆஸ்பத்திரியில் சோதனை செய்த அதிகாரிகள் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்ததாக கூறி ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தேனீர் விடுதிக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அம்மா பேட்டை மண்டலம் 37-வது வார்டில் உள்ள 2 நூற்பாலைகளில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டடதால் அந்த நூற்பாலைககளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனையை தொடங்கினர். அப்போது சேலம் கோரிமேடு அருகே உள்ள பச்சியம்மன் தியேட்டருக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகதாரமின்றி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தியேட்டர் வளாகம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து தியேட்டர் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் டெங்கு கொசு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கூறி தியேட்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
சேலம் மாநகரில் இது வரை மொத்தம் ரூ.28 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், மாநகராட் சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திடீர், திடீ ரென இந்த சோதனை தொடரும் என்றும், டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருப்பது கண்டறியப்பட்டால் உடனே அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.