செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நாளையும் தொடரும்: தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 22 போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டமைப்பு சார்பில் எழும்பூரில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நாளையும் தொடரும். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு தொழிலாளர்கள் காரணமில்லை. பொதுமக்களின் நலனுக்காகதான் இத்தனை நாட்களாக பொறுமையாக காத்திருந்தோம்.

ஒடாத பேருந்துகளை ஒடியதாக கணக்கு காட்டி நிதி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. தற்காலிக டிரைவர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருவதால் ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், எங்கள் தரப்பு கோரிக்கைகளை நாளை நீதிமன்றத்தில் முறையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.#TNTransportstrike #Busstrike #TamilNews