செய்திகள்

சிறந்த படம் உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகள் கிடைத்துள்ளது. #Oscars #Oscars90 #Oscars2018

மாலை மலர்

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். 

இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக ஷேப் ஆப் வாட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. 

சிறந்த படம் - த ஷேப் ஆப் வாட்டர் 

சிறந்த இயக்கம் - கில்லர்மோ டெல் டோரோ

சிறந்த இசை - அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்

தயாரிப்பு வடிவமைப்பு - பால் தென்கம் ஆஸ்டர்பெர்ரி, செட் வடிவமைப்பு - ஷேன் வியூ மற்றும் ஜெப்ரி ஏ.மெல்வின்.  #Oscars #Oscars90 #Oscars2018