செய்திகள்

காஷ்மீர்: இரண்டாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை - ஒரு தீவிரவாதி என்கவுண்டரில் பலி

காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில், இன்று ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லபட்டுள்ளார்.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில், இன்று ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லபட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பஹ்ம்னோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றது. அதிகாலை அப்பகுதியில் மூன்றாவதாக ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லபட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்றும் பாதுகாப்பு படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

தேடுதல் வேட்டையின் போது எதிர் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளால் இரண்டு ராணுவ வீரர்கள் காயம் அடந்துள்ளதாகவும், அவர்கள் முகாம் அலுவலகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT