முற்றுகை 
செய்திகள்

போனஸ் பறிப்பை கண்டித்து போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் இன்று முற்றுகை

போக்குவரத்துக் கழக கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல, கோட்ட தலைமையகங்களை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மாலை மலர்

சென்னை:

போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் கடந்த 2016-ம் ஆண்டு, அரசு ஊழியர்களுக்கு இணையாக 2.57 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டனர். அப்போது, அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. ஆனால் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது போனசை காரணம் காட்டி ஊதியத்தை பறித்தவர்கள் நட்டத்தை காட்டி போனசை பறிக்கின்றனர். அரசின் இத்தகைய செயலை கண்டிப்பதுடன், 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்துக் கழக கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னையில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள போக்குவரத்துக் கழக மண்டல, கோட்ட தலைமையகங்களை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கை கைவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

மேற்கண்ட தகவலை தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. தெரிவித்து உள்ளார்.